மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் உலா
10-Jan-2025
வெள்ளித்திருப்பூர் அருகே சிறுத்தைநடமாட்டத்தால் அச்சத்தில் மக்கள்பவானி,: வெள்ளித்திருப்பூர் அருகே, விவசாய தோட்டத்துக்கு நள்ளிரவு வந்த சிறுத்தையின், 'சிசிடிவி' காட்சி வெளியானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளித்திருப்பூர் அருகே, எண்ணமங்கலம் அனைகரடு சின்னக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 49. இவரது தோட்டத்துக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை ஒன்று வந்துள்ளது. சிறுத்தையை பார்த்ததும் நாய்கள் குறைத்துள்ளன. சத்தம் கேட்டு வெளியே வந்த விஸ்வநாதன், வீட்டுக்கு வெளியே பொருத்தியிருந்த 'சிசிடிவி' காட்சியை பார்த்தார். அப்போது, அவ்வழியாக சிறுத்தை ஒன்று நடந்து வருவது தெரிந்தது. இதுகுறித்து, நேற்று, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு விஸ்வநாதன் தகவல் கொடுத்தார்.அங்கு வந்த வனத்துறையினர், கால் தடம் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
10-Jan-2025