உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்ஈரோடு:ஜாக்டோ - ஜியோ சார்பில், ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு, உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராணி, கிருஷ்ணராஜ் உட்பட பலர் பேசினர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை