உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து இன்று நீர் திறப்புஅந்தியூர்:அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், 33.46 அடி உயரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. தற்போது நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள், அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து புதிய ஆயக்கட்டு, 2,924 ஏக்கர் பாசன பகுதிக்கு, இன்றிலிருந்து, ஜூன் 16 வரை, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 75 நாட்களுக்கு, 96.940 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று காலை அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !