உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை சாகர் பள்ளியில் யு.கே.ஜி., பட்டமளிப்பு விழா

பெருந்துறை சாகர் பள்ளியில் யு.கே.ஜி., பட்டமளிப்பு விழா

பெருந்துறை சாகர் பள்ளியில் யு.கே.ஜி., பட்டமளிப்பு விழாபெருந்துறை:பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில், யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளித் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முதல்வர் ஷீஜா வரவேற்றார். தாளாளர் சவுந்திரராஜன் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் குழந்தைகள் தாங்கள் கற்ற பாடல்களை பெற்றோர் முன்பு பாடிக்காட்டினர்.பள்ளி பொருளாளர் பழனிசாமி, துணைத்தலைவர் கிருஷ்ணன், இணை செயலாளர் சாமிநாதன் மற்றும் கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி, கே.ஜி.வகுப்பு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா சாமிநாதன் மற்றும் ஆசிரியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ