உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில்புதிய கட்டடம் கட்டுமான பணி தீவிரம்

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில்புதிய கட்டடம் கட்டுமான பணி தீவிரம்

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில்புதிய கட்டடம் கட்டுமான பணி தீவிரம்கோபி:கவுந்தப்பாடி, அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடம் கட்ட கட்டுமான பணிகள் நடக்கிறது.கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவர் ஆனந்தன் உட்பட நான்கு டாக்டர்கள் உள்ளனர். 1993ல் உருவான அரசு மருத்துவமனை, 1.32 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு பிரிவுகளுடன் இயங்குகிறது. அங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ பகுதிக்கு எதிரே இருந்த, பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, பல்வேறு பிரிவுகளுக்கான புதிய கட்டடம் கட்டமைக்க முடிவானது.இதையடுத்து, 2024 டிச., 20ல், ஈரோட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனை வளாகத்தில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக கூடுதல் கட்டடம் கட்டமைப்புக்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அங்கு கான்கிரீட் கட்டமைப்புக்காக, நில மட்டத்தில் குழி தோண்டி பணிகள் தீவிரமாக நடக்கிறது. புதிய கட்டடம் உருவான பின், அங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த சேமிப்பு வங்கி, காப்பீடு பிரிவு, ஸ்கேனிங் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு உருவாக உள்ளது. இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை