உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் மனு

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் மனு

ஈரோடு: தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதா-வது: ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து யூனியன், டவுன் பஞ்.,களில், 8 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி செய்கிறோம். மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனில் தலா, 20 பேர் வீதம், 280 பேர் பணி செய்தோம். 42 டவுன் பஞ்.,களில் தலா, 10 பேர் என, 420 பேர் பணி செய்தனர். ஆட்களை தொடர்ந்து குறைத்து தற்போது ஒரு யூனியனுக்கு, தலா, 10 பேர் வீதம், 140 பேர் பணி செய்கிறோம். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கொரோனா காலத்திலும், டெங்கு அதிகமாக இருந்த காலத்திலும் வேலை செய்தவர்கள். வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை