உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் கடத்தல் சத்துணவு ஆசிரியை கைது

புகையிலை பொருள் கடத்தல் சத்துணவு ஆசிரியை கைது

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, ஆம்னி பஸ்சில், புகையிலை பொருட்கள் கடத்திய சத்துணவு ஆசிரியையை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரம் சர்ச் தெருவை சேர்ந்-தவர் மணிமாறன் மனைவி அருள்செல்வி, 49; பழவூர் அரசு மேல்-நிலை பள்ளியில், சத்துணவு ஆசிரியையாக பணிபுரிந்து வரு-கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு - நாகர்-கோவில் செல்லும் ஆம்னி பஸ்சில், சேலம் - நாமக்கல் வழியாக நாகர்கோவிலுக்கு புகையிலை பொருட்களை கடத்திச் செல்வ-தாக, நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெண்ணந்துார் அருகே, கீரனுார் செக் போஸ்டிற்கு ஆம்னி பஸ் வந்தபோது, பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்த-குமார் தலைமையிலான போலீசார், பஸ்சை நிறுத்தி சோதனை-யிட்டனர்.அப்போது, நான்கு பைகளில் இருந்த, 32.5 கிலோ புகையிலை, ஆறு கிலோ கூல் லிப் பொருட்களை பறிமுதல் செய்து, சத்து-ணவு ஆசிரியை அருள்செல்வியை கைது செய்தனர்.தங்கம் விலை ரூ.360 சரிவுசேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 8,035, பவுன், 64,280 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 45 ரூபாய், பவுனுக்கு, 360 ரூபாய் குறைந்தது. அதன்படி கிராம், 7,990, பவுன், 63,920 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல் நேற்று முன்தினம் வெள்ளி கிராம், 105, கிலோ, 1,05,000 ரூபாய்க்கு விற்றது. நேற்றும் அதே விலை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !