உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

ஈரோட்டில் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், 11 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கும், இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம், நாளை முதல் 24 வரை நடக்கிறது. இந்திய ராணுவத்துக்கு சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்ஸிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் சோல்ஜர் டிரெட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 தேர்ச்சி வரையான கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். முதலில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கிறது. அதையடுத்து உயரம் மற்றும் மார்பளவு சோதனை நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறும் இளைஞர்கள் ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டியில் கலந்து கொள்வர். அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான தேதி பின்னர் தெரியவரும். இம்முகாமில் 11 மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் வரிசையாக செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள், உடற்தகுதி தேர்வு நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கூடாரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு வரும் இளைஞர்கள் வசதிக்காக நடமாடும் கழிப்பிடம், தற்காலிக கழிப்பிடம், குடிநீர் வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடக்கும் இம்முகாமில் ஆட்களை தேர்வு செய்வதற்காக இந்திய தரைப்படை தேர்வுக் குழு தலைவர் கர்னல் வர்க்கீஸ் தலைமையில், கோவையில் இருந்து, 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். முகாம் நடக்கும் இடத்துக்குள் பிறர் செல்ல முடியாத அளவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை