ரயில் மோதி டீ மாஸ்டர் பலி
- ரயில் மோதி டீ மாஸ்டர் பலிஈரோடு,:ஈரோடு அருகே சாவடிபாளையம்-பாசூர் ரயில்வே ஸ்டேஷன் இடையே, காயங்களுடன் ஆண் உடல் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் மொடக்குறிச்சி, ஓலப்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்த டீ மாஸ்டர் செல்வராஜ், 44, என்பது தெரிந்தது. ஏழு ஆண்டாக மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி பலியானதாக, போலீசார் தெரிவித்தனர்.