உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசநோய் எதிர்ப்புவிழிப்புணர்வு முகாம்

காசநோய் எதிர்ப்புவிழிப்புணர்வு முகாம்

காசநோய் எதிர்ப்புவிழிப்புணர்வு முகாம்ஈரோடு, :சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்.,ல் காசநோய், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. காசநோய் பரவும் விதம், அறிகுறிகள், நுரையீரல் காசநோய் அறிகுறி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்களை தேடி மருத்துவ திட்ட நோக்கம், அதன் பயன்கள், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜா, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற, 75 பேருக்கு நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !