உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசநோய் இல்லா இயக்கவிழிப்புணர்வு முகாம்

காசநோய் இல்லா இயக்கவிழிப்புணர்வு முகாம்

காசநோய் இல்லா இயக்கவிழிப்புணர்வு முகாம்ஈரோடு :ஈரோடு மாவட்டம், நம்பியூர் டவுன் பஞ்., பகுதி பெரியார் நகர், ரங்கநாதபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில், காசநோய் இல்லா விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார். காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன்சர்மா முன்னிலை வகித்தார். காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோய் அறிகுறி, பரிசோதனை, டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் நோக்கம் மற்றும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் பங்கேற்ற மக்களுக்கு மார்பக எக்ஸ்ரே பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை