உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தைக்கான ஏலம் ரத்துபி.டி.ஓ., ஆபிசில் போராட்டம்

வாரச்சந்தைக்கான ஏலம் ரத்துபி.டி.ஓ., ஆபிசில் போராட்டம்

வாரச்சந்தைக்கான ஏலம் ரத்துபி.டி.ஓ., ஆபிசில் போராட்டம்பவானி:பூதப்பாடி, குறிச்சி, வெள்ளித்திருப்பூர், அட்டவணைப்புதுார், சனிச்சந்தை ஆகிய வார சந்தைகள் மற்றும் சிங்கம்பேட்டை, காடப்பநல்லுார், கேசரிமங்கலம் பரிசல் துறைகளுக்கு சுங்கம் வசூலிப்பதற்கான ஏலம், அம்மாபேட்டை யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஏலத்துக்கான டெபாசிட் கட்டிய, 164 பேர் அலுவலகத்துக்கு வந்தனர். நிர்வாக காரணங்களுக்காக ஏலம் ரத்து செய்யப்படுவதாக, பி.டி.ஓ., கதிரேசன் அறிவித்தார். இதனால் பங்கேற்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதம் செய்து, பி.டி.ஓ., அறையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அம்மாபேட்டை போலீசார் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் ஏலம் முறையாக நடத்தப்படும் எனக்கூறவே, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை