உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்ப்ரஷர் வாகனத்தில் சிக்கி உரிமையாளர் பலி

கம்ப்ரஷர் வாகனத்தில் சிக்கி உரிமையாளர் பலி

கம்ப்ரஷர் வாகனத்தில் சிக்கி உரிமையாளர் பலிடி.என்.பாளையம்,:டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்துாரை சேர்ந்தவர் ஐயப்பன் 39; திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். சொந்தமாக டிராக்டர் கம்ப்ரசர் வாகனம் வைத்து ஐயப்பன் வாடகைக்கு ஓட்டி வந்தார். வாணிப்புத்துாரை சேர்ந்த குப்பணன் தோட்டத்தில் பாறை கற்களை அகற்றி, நிலத்தை சமன் செய்யும் வேலையில் நான்கு நாட்களாக கம்பரஷர் வாகனம் மூலம் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மதியம் கியரில் இருப்பது தெரியாமல், கம்ப்ரஷர் வாகனத்தை இயக்கியபோது, பின்னோக்கி நகர்ந்து ஐயப்பன் மீது ஏறியது. இதில் தலை, கை-கால்களில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே இறந்து விட்டார். இதுறித்து பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை