உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டா ஆலோசனை கூட்டம்அதிகாரிகளுக்கு டோஸ்

பட்டா ஆலோசனை கூட்டம்அதிகாரிகளுக்கு டோஸ்

பட்டா ஆலோசனை கூட்டம்அதிகாரிகளுக்கு 'டோஸ்' தாராபுரம்:வீட்டுமனை பட்டா வழங்குதல் தொடர்பாக, தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன், அமைச்சர் கயல்விழி நேற்று ஆலோசனை செய்தார். கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், 'எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். எல்லோரையும் சந்திக்க வேண்டும்; இதெல்லாம் பார்க்கிறது இல்லை. ஆர்.ஐ., ஆபீஸ்ல உட்கார்ந்துகிட்டு, பாத்துகிட்டு போயிறது! ஒன்னும் வேலை செய்யறது இல்ல, போய் பார்த்தால் தானே தெரியும், இடம் எங்கே இருக்கிறது' என்று என, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை விளாசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி