மேலும் செய்திகள்
சிங்கபெருமாள் கோவிலில் 'ஜி ஸ்கொயர்' குடும்ப விழா
23-Feb-2025
பக்தர்கள் பாதங்களை பாதுகாக்கபாரியூர் கோவிலில் 'காயர் மேட்'கோபி:கோபி அருகேயுள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது. கோவில் வளாகத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.வெயில் காலத்தில் கோவிலை வலம் வரும் பக்தர்கள் சூடு தாங்காமல் அவதிப்பட்டனர். இதை தவிர்க்க கோடை காலத்தில் மட்டும் மேட் விரிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வாக சில ஆண்டுகளுக்கு முன், 'சம்மர்கோட்' பெயின்ட் அடித்தனர். ஆனால் கடும் வெயிலால் கிரானைட் கற்கள் பெயின்டை உறிஞ்சியதால் அந்த முயற்சி வீணாகியது.தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், அறநிலையத்துறை சார்பில், தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்பு ('காயர் மேட்'), ராஜகோபுரம் அருகே துவங்கி, 484 அடி நீளத்தில் நான்கு அடி அகலத்தில், 1,936 சதுர அடிக்கு கோவில் வளாகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. இதனால் வெயிலில் பாதம் சுடாமல் பக்தர்கள் வலம் வரலாம். கோடை காலம் முடியும் வரை 'காயர் மேட்' போடப்பட்டிருக்கும் என்று, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
23-Feb-2025