உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்

பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்

பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்ஈரோடு: ஈரோடு-பெருந்துறை சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் குறிப்பிட்ட இடங்களில் டூவீலர், குறிப்பிட்ட இடங்களில் கார்களை நிறுத்த போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அனுமதித்துள்ளனர். சமீபமாக தனியார் வாடகை டாக்ஸிகள், ஆம்புலன்ஸ்கள், சில தனி நபர்கள் பாலத்தின் கீழ் முழுமையாக தங்கள் வாகனங்களை நிறுத்தி, தொழில் செய்கின்றனர். இதால் கடைவீதிக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், கடைவீதிக்கு வருவோருக்கும், டாக்ஸி, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் பிரச்னை தொடர்கிறது. இதுபற்றி போலீசார் ஆய்வு செய்து ஓரிரு டாக்ஸி, ஆம்புலன்ஸ் வாகனங்களை மட்டும் நிறுத்த அனுமதித்து, பிற வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கித்தர கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை