இலவச வேட்டி, சேலை கூலி உயர்வுக்கு பாராட்டு
இலவச வேட்டி, சேலை கூலி உயர்வுக்கு பாராட்டுஈரோடு:ஈரோட்டில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் வேலுசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழக பட்ஜெட்டில், விசைத்தறிக்கு என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி உற்பத்திக்கு கூலி, 24 ரூபாயில் இருந்து, 26.40 ரூபாயாகவும், சேலைக்கு, 43.01 ரூபாயில் இருந்து, 46.75 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர். இதன் மூலம், பல லட்சம் விசைத்தறியாளர்கள் பயன் பெறுவர். இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.