சீரற்ற மின் வினியோகம்ஓட்டு வீட்டில் தீ விபத்து
சீரற்ற மின் வினியோகம்ஓட்டு வீட்டில் தீ விபத்துஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, மோகன் குமாரமங்கலம் வீதியில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் சரவணன் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று காலை, 11:45 மணிக்கு சீரற்ற மின் வினியோகத்தால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டின் மேற்கூரை, பணம், நகை, பீரோவில் இருந்த துணி, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து விட்டது. சேத மதிப்பு, ௨ லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. சீரற்ற மின் சப்ளையால் சரவணன் வீட்டருகே மூன்று வீடுகளில் மின் ஒயர் கருகியது.