உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் மறியலில் ஈடுபட்டபோக்குவரத்து ஊழியர் 170 பேர் கைது

ஈரோட்டில் மறியலில் ஈடுபட்டபோக்குவரத்து ஊழியர் 170 பேர் கைது

ஈரோட்டில் மறியலில் ஈடுபட்டபோக்குவரத்து ஊழியர் 170 பேர் கைதுஈரோடு, :ஈரோடு, சென்னிமலை சாலை, காசிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை முன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ரகுராமன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு போக்குவரத்து கழகத்துக்குள், தனியார் மய நடவடிக்கையை கைவிட வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களின், 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக பேசி தீர்வு காண வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.ஓய்வு பெற்றோருக்கு ஆண்டுக்கணக்கில் வழங்காமல் வைத்துள்ள, டி.ஏ., நிலுவையை உடன் வழங்க வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டதாக, 20 பெண்கள் உட்பட, 170 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ