பண்ணாரி கோவில் பாதுகாப்பு பணிக்குபோதையில் சென்ற 2 ஏட்டு சஸ்பெண்ட்
பண்ணாரி கோவில் பாதுகாப்பு பணிக்குபோதையில் சென்ற 2 ஏட்டு சஸ்பெண்ட்ஈரோடு:பண்ணாரி மாரியம்மன் கோவில் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட குடிபோதையில் சென்ற, கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டுகள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து போலீசார் சென்றனர். இதில் கருங்கல்பாளையம் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டுக்கள் சுரேஷ், பிரபாகரனும் சென்றனர். இவர்களுக்கு கடந்த, ௭ம் தேதி கோவில் நுழைவு வாயில் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு பணிக்கு வர .வேண்டும். ஆனால் அதிகாலை, 3:00 மணிக்கு சீருடையுடன் வாகன நிறுத்துமிடத்துக்கு காரில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பல்லடம் டி.எஸ்.பி., பணி விபரம் குறித்து கேட்டுள்ளார். பதில் சொல்லாமல் டி.எஸ்.பி.,யின் கையை பிடித்து காருக்குள் இழுத்துள்ளனர். அவரோ உஷாராக கார் சாவியை எடுத்துக் கொண்டார். இருவருக்கும் சத்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.இதில் இருவரும் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் விசாரணை நடத்தி, எஸ்.பி., சுஜாதாவுக்கு அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.