மேலும் செய்திகள்
சாலை, வடிகால் பணி துவக்கம்
28-Dec-2024
தி.மு.க., வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடிஈரோடு, : ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், அவரது மனைவி, மகன் ஆகியோரின் சொத்து மதிப்பு, 2.56 கோடி ரூபாயாகும். நேற்று வேட்பு மனுவுடன், தனது சொத்து மதிப்பு குறித்த விபரங்களையும் தாக்கல் செய்தார். அதில் அவர் மீது வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை. மனைவி பெயரில், 6.50 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது.சந்திரகுமார் வசம், 4.35 லட்சம் ரூபாய், அவரது மனைவி அமுதாவிடம், 3.85 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது. சந்திரகுமார் பெயரில் 'கேப்டன் டிவி'யில், 15 லட்சம் ரூபாய் ஷேர் வைத்துள்ளார்.சந்திரகுமாரிடம், 25,000 ரூபாய் மதிப்பில் யமஹா பைக், 23.40 லட்சம் ரூபாய் மதிப்பில், 325 கிராம் தங்கம் உள்ளது. மனைவி பெயரில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்கார்பியோ கார், 25.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 350 கிராம் தங்கம் உள்ளது. அசையும் சொத்தாக சந்திரகுமாரிடம், 77.83 லட்சம் மதிப்பிலும், அசையா சொத்து, 39 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளது. மனைவி பெயரில் அசையும் சொத்து, 53.74 லட்சம் ரூபாய், அசையா சொத்து, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கடன், 6.50 லட்சத்துக்கும், மகன் மெகர்வின்ஸ்ரீ பெயரில், அசையும் சொத்து, 9.35 லட்சம் ரூபாய், அசையா சொத்து, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளது. மொத்தத்தில் குடும்பத்தில், 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாக, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
28-Dec-2024