தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ-டிக்கை குழு (டிட்டோ ஜாக்), ஈரோடு மாவட்ட கிளை சார்பில், ஈரோட்டில் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிட்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முத்து ராம-சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழக ஆசிரியர் கூட்-டணி மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். சி.பி.எஸ்., முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடை-முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 31 கோரிக்கையை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரி-யைகள் கலந்து கொண்டனர்.டிட்டோ ஜாக் சார்பில் நேற்று, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்-டனர். இதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 2,406 பேரில், 993 ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகினர்.