விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்
விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்தாராபுரம்:தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில், கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த விஜயகுமார், 38, செல்வராஜ், 38, விக்னேஷ், 31, சம்பவ இடத்தில் பலியாகினர். இவர்கள் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுஉதவி வழங்கினார்.