மேலும் செய்திகள்
டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
05-Jan-2025
பைக் திருடிய இருவர் கைது
14-Jan-2025
விபத்தில் ஒருவர் பலிபு.புளியம்பட்டி, :பவானிசாகர் அடுத்துள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன்,65. இவர் தொட்டம்பாளையத்திலிருந்து, தொப்பம்பாளையத்தில் உள்ள தன் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பவானிசாகர் புளியம்பட்டி சாலையில் தொப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வலது புறம் திரும்ப முயற்சித்த போது அதே திசையில், கோவை சிறுமுகையில் இருந்து வந்த தனியார் கல்லூரி பஸ், சுப்பையன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். பவானிசாகர் போலீசார், தனியார் கல்லூரி பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தினர்.
05-Jan-2025
14-Jan-2025