தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு
தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவுபவானி:சித்தோடு அருகே, நசியனுார் சாமிகவுண்டன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் மில்லில், உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த ருஸ்தம்சா, 29, என்பவர் மனைவி, மூன்று குழந்தைகளுடன் மில் வளாகத்திலேயே தங்கி, வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ருஸ்தம்சா, அவரது மனைவி இருவரும் பகல் ஷிப்ட் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த ஒரு வயது குழந்தை ஆயிபாபானுவை காணவில்லை. இந்நிலையில், வீட்டிலிருந்து சில அடி துாரத்தில் உள்ள எல்.பி.பி. வாய்க்காலில் குழந்தை மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.