வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு
வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்புகோபி, :கோபி அருகே மூலவாய்க்கால் பகுதியில் தடப்பள்ளி வாய்க்காலில், ஆண் உடல் நேற்று மதியம் மிதந்தது. கோபி போலீசார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உதவியுடன் மீட்டு விசாரித்தனர். இதில் கோபியை சேர்ந்த சுந்தரராஜன், 55, என தெரிந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில், கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.