உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முற்பிறவியில் வாழ்ந்த வள்ளி, தெய்வானை

முற்பிறவியில் வாழ்ந்த வள்ளி, தெய்வானை

முற்பிறவியில் வாழ்ந்த வள்ளி, தெய்வானைசென்னிமலை ஆண்டவரின் அம்பாள் வள்ளி, தெய்வானை ஆகிய அழகிய தேவியர் இருவரும், முன்னொரு காலத்தில், முருகப்பெருமானை அடைய வேண்டினர். அப்போது, அவர்கள் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற திருப்பெயருடன் தவமிருந்தனர்.முருகப்பெருமான் பழத்துக்காக, கோபித்து மலைமேல் பாலமுருகனாக வீற்றிருந்த சமயம், தேவியர் இருவரிடம் பிற்காலத்தில் வள்ளி, தெய்வானை என்ற பெயரில், தம்மை வந்தடைவீர்கள் என அருள்பாலித்தார்.ஆதிபழனி என சான்றோர்களால் வழங்கப்படும் சென்னிமலை திருத்தலத்தில், முருகப்பெருமான், பாலமுருகனாக வீற்றிருப்பதால், இங்குள்ள தேவியர் இருவரும், தவக்கோலத்தில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாக வீற்றிருக்கின்றனர்.திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம்.இங்கு வள்ளி, தெய்வானை ஆகிய தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டிருப்பதும், தேவியர் இருவரும், சுயம்பு உருவாய் அமையப்பெற்றிருப்பதும் தனிச்சிறப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை