மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
16-Feb-2025
காங்கேயம் காளை சிலைஅமைப்பினர் ஆலோசனைகாங்கேயம்:காங்கேயம் காளை சிலை அமைக்கும் சங்கத்தின் சார்பில், காங்கேயத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.துணை தலைவர் ரவி, செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் சிவராஜா மற்றும் பொருளாளர் சக்திக்குமார் முன்னிலை வகித்தார். காங்கேயம் இன காளைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மாட்டு பால் உற்பத்தி அதிகரிக்க, சிறந்த மாடுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வழங்கவேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் அரசே காப்பீடு வழங்க வேண்டும்.தெருநாய்களால் ஆடுகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
16-Feb-2025