உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ளக்காதல் விவகாரத்தில்கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

கள்ளக்காதல் விவகாரத்தில்கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

கள்ளக்காதல் விவகாரத்தில்கான்ஸ்டபிள் மீது தாக்குதல்அந்தியூர் :அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35; ஈரோடு ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்த நிலையில், கடம்பூர் போலீஸ் ஸ்டேஷன் முதல் நிலை காவலராக தற்போது பணிபுரிகிறார். திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். சந்திபாளையத்தை சேர்ந்தவர் பூபதி. மீன் சில்லி கடை நடத்துகிறார். இவரின் மனைவிக்கும், சதீஷ்குமாருக்கும் கள்ளக்காதல் உள்ளது. பூபதி எச்சரித்தும் சதீஷ்குமார் கேட்கவில்லை. சதீஷ்குமாரின் மனைவிக்கும் தகவல் தெரிந்து, ஈரோடு எஸ்.பி.,க்கு புகார் அளித்தார். இதை தொடர்ந்து கடம்பூர் போலீஸ் ஸடேஷனுக்கு சதீஷ்குமார் மாற்றப்பட்டார். அந்தியூரில் உள்ள குடும்பத்தினரை பார்க்க நேற்று முன்தினம் மாலை வந்த சதீஷ்குமார், தவிட்டுப்பாளையத்தில் துணிக்கடையில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக வந்த பூபதி, சதீஷ்குமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து, 'உன்னால்தான் என் குடும்பம் பிரிந்து விட்டது' என்றுகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தெரிகிறது. இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை