அரசு பள்ளியில் அறிவியல் தினம்
அரசு பள்ளியில் அறிவியல் தினம்காங்கேயம்:தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, காங்கேயம் அருகேயுள்ள வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கீதாமணி தலைமையில், மாணவ, மாணவியர், 70 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுனர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்பார்வையிட்டனர்.* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 14,787 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 51.61 ரூபாய் முதல், 63.39 ரூபாய், வரை, 4,633 கிலோ தேங்காய், 2.௬௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார விவசாயிகள், 2,806 மூட்டைகளில், ௧.௩௦ லட்சம் கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 134.35 ரூபாய், அதிகபட்சம், 151.19 ரூபாய்க்கு விற்றது. இரண்டாம் தரம் கிலோ, 32 ரூபாய் முதல் 144.92 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், ௧.௮௨ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 3,300 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,350 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,280 ரூபாய் முதல், 1,380 ரூபாய்; அச்சு வெல்லம், 400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,320 ரூபாய் முதல், 1,370 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றம் இல்லை. * சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. சத்தி சுற்று வட்டார விவசாயிகள், 2,092 வாழைத்தார் கொண்டு வந்தனர். ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 56 ரூபாய், நேந்திரன், 41 ரூபாய்க்கு விலை போனது. பூவன் தார், 750 ரூபாய், ரஸ்தாளி, 730, தேன்வாழை, 810, செவ்வாழை, 1,320, ரொபஸ்டா, 530, பச்சைநாடன், 400 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4.69 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. துவரம் பருப்பு (கிலோ), 120 முதல், 130 ரூபாய், குண்டு உளுந்து, 110 முதல், 120 ரூபாய்க்கும், பச்சை பயிர், 110 முதல், 130 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு, 130 ரூபாய், கொள்ளு, 70 முதல், 80 ரூபாய்க்கும், தட்டைப்பயிர், 110 முதல், 120 ரூபாய்க்கும், கடுகு, பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு, கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், வெந்தயம் தலா, 100 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் மல்லி, 120 முதல், 140 ரூபாய், சீரகம், 300, புளி, 120, வரமிளகாய், 150, பூண்டு, 80 முதல், 150 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. * கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 44 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 660, தேன்வாழை, 810, செவ்வாழை, 1,360, ரஸ்த்தாளி, 600, பச்சைநாடான், 460, ரொபஸ்டா, 410, மொந்தன், 380 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,985 வாழைத்தார்களும், 13.80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 12 ரூபாய்க்கும், அதிகபட்சம், 36 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 8,796 தேங்காய்களும், 2.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.