உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடுஈரோடு:ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தில் உள்ள, மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 'வாங்குபவர்கள் - விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டம்', ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையம் சி.டி., ரோட்டரி ஹாலில் நாளை (14) நடக்க உள்ளது.கைவினை பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவை, துண்டு, ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, டிசைன் மிதியடி, ெஹர்பல் நாப்கின், சோப், பேன்சி பொருட்கள், காட்டன் பை, சிறுதானியங்கள், சிறு தானிய உணவு பொருட்கள், தேன், தின்பண்டங்கள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மகளிர் குழுவினர், கொள்முதலாளர்கள் பங்கேற்று தரமான பொருட்களை வாங்கி, மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை