மேலும் செய்திகள்
தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
27-Feb-2025
தெருவிளக்கு வசதியின்றிவாகன ஓட்டுனர்கள் அவதிகோபி:கோபி அருகே மாரப்பம்பாளையம் பிரிவில், போதிய தெருவிளக்கு வசதியின்றி, பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர்.கோபி-ஈரோடு சாலையில், மாரப்பம்பாளையம் பிரிவு உள்ளது. எந்நேரமும் வாகன நடமாட்டம் உள்ள பிரிவில், போதிய தெருவிளக்கு வசதியின்றி, இரவு நேரத்தில் மக்கள் அவதியுறுகின்றனர். குறிப்பாக வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று, இரவு நேரத்தில் வீடு திரும்புவோர், இருட்டில் அவதியுறுகின்றனர். வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தை வைத்து கொண்டு, ஈரோடு சாலையை மக்கள் கடக்க வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் அல்லது யூனியன் நிர்வாகம் அப்பகுதியில், உயர் கோபுரம் மின் விளக்கு வசதி ஏற்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Feb-2025