கீழ்வாணி வி.ஏ.ஓ.,அலுவலகம் முன் குளம்
கீழ்வாணி வி.ஏ.ஓ.,அலுவலகம் முன் குளம்பவானி:அத்தாணி அருகே கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. மழைநீரானது கீழ்வாணி சந்தை வளாகம் அருகே மற்றும் கீழ்வாணி வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில் நேற்றும் குளம்போல் தேங்கியிருந்தது. இதனால் அலுவலகம் வந்த மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மழை பெய்தால் அலுவலகம் முன் குளம்போல் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. இதற்காவது உடனடி காண வி.ஏ.ஓ., முயற்சிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.