பாதிக்காமல் சாலை; அமைச்சரிடம் மனு
பாதிக்காமல் சாலை; அமைச்சரிடம் மனுசென்னிமலை:காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலைக்கு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வந்தார். அப்போது அமைச்சரிடம் பசுவபட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். மனு விபரம்: சென்னிமலை அருகே பிடாரியூரில் இருந்து சாலை பிரிந்து பசுவபட்டி பிரிவில் இணையும் வகையில் சென்னிமலை புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் பசுவப்பட்டி பிரிவில் புறவழிச்சாலை இணையும் இடத்தில், 29 வீடு உள்ளது. இவற்றில் ஏழை மக்களான நாங்கள், 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். சிறு கடைகளும் உள்ளன. புறவழிச் சாலைக்காக இவற்றை அகற்றினால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். இந்த வழியாக புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கும் வாய்ப்புள்ளது. எனவே வடக்கு பகுதியில் உள்ள அரசு நிலத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.