உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம்

பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம்

பழங்குடியினர் நலவாரியஅட்டை பெற சிறப்பு முகாம் நாமக்கல்:கொல்லிமலை பகுதி பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாள அட்டை பெற, கொல்லிமலையில் உள்ள, 14 பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.முகாமில் கலந்துகொள்பவர்கள், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப தலைவரின் புகைப்படம், 2 ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். 25ல் அரியூர் நாடு, கிராம ஊராட்சி அலுவலகத்தில், காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரை; 26ல் பைல்நாடு; 27ல் சித்துார் நாடு; 28ல் எடப்புளி நாடு; ஏப்., 1ல் தேவனுார் நாடு, 2ல் குண்டனி நாடு, 3ல் குண்டூர் நாடு; 4ல் பெரக்கரை நாடு, 8ல் சேலுார் நாடு; 9ல் திண்ணனுார் நாடு; 10ல் திருப்புளி நாடு; 11ல் வளப்பூர் நாடு; 15ல் வாழவந்தி நாடு கிராம ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.பதிவு செய்பவர்கள், 18 வயது நிரம்பியவர் களாகவும், 65 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ