பவானி நகராட்சியில் மூடாத குழியால் அவதி
பவானி நகராட்சியில் மூடாத குழியால் அவதிபவானி:பவானி நகராட்சிக்கு உட்பட்ட, 13, 14வது வார்டுகள் சந்திக்கும், பழனிபுரம் முதல் நான்காவது வீதி சந்திப்பில், கடந்த ஆண்டு டிச., மாதம், அம்ரூத் திட்டத்துக்காக குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டினர்.மூன்று மாதங்களாகியும் குழியை மூடவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தும் குழியை மூடவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் மற்றும் வாகனங்கள் கடப்பதற்கு சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அம்ரூத் திட்டத்தில் குழி தோண்டும் பணி விரைவாக நடக்கிறது. ஆனால் குழியை மூடாமல் தாமதம் ஏற்படுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் வரும், 24ல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.