இந்திய பாதுகாப்பு படைசார்பில் மனு வழங்கல்
இந்திய பாதுகாப்பு படைசார்பில் மனு வழங்கல்பவானி:இந்திய பாதுகாப்பு படையின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில், பவானி யூனியன் அலுவலகத்தில், மனு வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:பவானி யூனியன், ஒரிச்சேரி பஞ்.,க்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை. மேலும் குடிநீர் வேண்டி, பக்கத்து ஊருக்கு குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆகவே, இப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.