உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்கோபி:தடப்பள்ளி வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களில், தொடர்ந்து வேளாண் விளை பொருட்கள் கொள்ளை போவதாக, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி, கோபி தாசில்தார் மற்றும் கோபி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பாரியூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வாழைத்தார் களவு போகிறது. நஞ்சகவுண்டம்பாளையம் சுப்புகவுண்டர், சீனிவாசன், குள்ளம்பாளையம் சண்முகம், வெள்ளாளபாளையம், விஜயகுமார் ஆகியோர் தோட்டத்தில், பல நுாறு வாழைத்தார் வெட்டி திருடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ