உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி ஆற்றில் கழிவுநீர்; பவானிசாகரில் கண்டனம்

பவானி ஆற்றில் கழிவுநீர்; பவானிசாகரில் கண்டனம்

பவானி ஆற்றில் கழிவுநீர்; பவானிசாகரில் கண்டனம்பவானிசாகர்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி தனியார் சாய மற்றும் காகித ஆலைகளின் ரசாயன கழிவுநீரால், பவானி ஆற்று நீர் மாசடைந்து நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது.ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில், பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பவானிசாகர் முன்னாள் இ,கம்யூ.,- எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சத்தி, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் கம்யூ., கட்சியினர், காங்., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர். பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ