உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோரை புற்களின் பிடியில் பவானி ஆறு

கோரை புற்களின் பிடியில் பவானி ஆறு

கோரை புற்களின் பிடியில் பவானி ஆறுபவானி:பவானி அருகே ஒரிச்சேரியில் பவானி ஆறு செல்கிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் சமயங்களில் இருகரைகளை தொட்டு தண்ணீர் சென்றது.தண்ணீரின் அளவு குறைய குறைய, ஈரப்பதம் இருந்த பகுதிகளில் கோரைப்புற்கள் புதர் போல் படர்ந்து வளர்ந்து விடுகிறது.இதனால் தற்போது ஆறே தெரியாத அளவுக்கு, காடு போல் கோரைப்புல் வளர்ந்து காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஒரிச்சேரி பவானி ஆற்றில், மக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், நான்கு, ஐந்து இடங்கள் இருந்தன. தற்போது கோரைப்புற்கள் வளர்ந்து விட்டதால் இரண்டு இடம் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் துணி துவைப்பதிலும், குளிப்பதிலும் சிரமம் நிலவுகிறது. இடையூறாக உள்ள கோரைப்புற்களை, பவானி பொதுப்பணித்துறையினர் அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ