உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை நீர்வரத்து1,398 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து1,398 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து1,398 கன அடியாக அதிகரிப்புபுன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும், அணையில் இருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பவானிசாகர் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 281 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 1,398 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 82.64 அடியாகவும், (மொத்த நீர்மட்டம் 105அடி) நீர் இருப்பு, 17.1 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்துள்ளதால், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட, 2,300 கன அடி தண்ணீர் நேற்று காலை முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் பவானி ஆற்றில் இருந்து, அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை