தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்ரூ.239 காப்பீட்டில் இணைய அழைப்பு
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்ரூ.239 காப்பீட்டில் இணைய அழைப்புஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், 239 ரூபாய்க்கு காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெற, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி, விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில், 20,000 ெஹக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரம் ஏறுபவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளதால், தென்னை வளர்ச்சி வாரியம் புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. தென்னை மரம் ஏறுபவர்கள், அறுவடை செய்பவர்கள், நீரா சேகரிப்போர், தென்னையில் கலப்பினம் செய்யும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரலாம். 18 முதல், 65 வயது உடைய தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை செலவுடன், மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி கிடைக்கும். உறுதி செய்யப்பட்ட காப்பீடு தொகை, 7 லட்சம் ரூபாயாகும். மருத்துவமனை செலவுகளுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆண்டு சந்தா, 956 ரூபாய். இதில், 717 ரூபாயை தென்னை வளர்ச்சி வாரியமும், மீதமுள்ள, 239 ரூபாயை பயனாளி செலுத்த வேண்டும். காப்பீடு மற்றும் விண்ணப்பிப்பது தொடர்பான விபரத்தை, சம்மந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல அலுவலகத்தை, 0422 2993684 என்ற எண்ணில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.