உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலிகாங்கேயம்,:காங்கேயம் நால்ரோடு அய்யன்வலசு, புல்லாய்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சொர்ணாத்தாள், 80; தோட்டத்தில் இரண்டு வெள்ளாடு வளர்த்து வந்தார். நேற்று மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மதியம் ஆடுகளை அவிழ்த்து செல்ல வந்தார். ஆனால், இரண்டு ஆடுகளும் இறந்து கிடந்தன. வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் பலியானது தெரிந்தது. சாவடி கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி