கொண்டத்து காளியம்மன் கோவிலில்2.5 டன் பூக்களால் தயாராகும் பல்லக்கு
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், இரண்டரை டன் பூக்களால் மலர்ப்பல்லக்கு தயாராகிறது.கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 9ல் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. விழா முக்கிய நிகழ்வாக மலர் பல்லக்கு ஊர்வலம் நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் துவங்குகிறது. இதற்காக வெள்ளை செவ்வந்தி, புளூ ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்து வகையான இரண்டரை டன் பூக்களால் பிரமாண்ட மலர் பல்லக்கு தயாரிக்கும் பணி ஒரு வாரமாக நடக்கிறது. பூக்கள் மீது சீரியல் பல்பு மற்றும் ஒளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. தவிர மலர்கள் மற்றும் அணிகலன்களால், அலங்கரிக்கப்பட்ட உற்சவர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இருந்து பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக, கோபி நகரை மலர் பல்லக்கு இன்று (12ம் தேதி) வந்தடைகிறது. விழா ஏற்பாட்டை அறநிலையத்துறையினர் தீவிரமாக செய்கின்றனர்.