உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி டிரைவரை தாக்கி ரூ. 56 ஆயிரம் வழிப்பறி

லாரி டிரைவரை தாக்கி ரூ. 56 ஆயிரம் வழிப்பறி

பெருந்துறை: பெருந்துறை அருகே லாரியை வழிமறித்து, டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி, டிரைவரிடமிருந்து, 56 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் பறித்து சென்றது. சேலம் மாவட்டம் இடைப்பாடி வெள்ளாண்டி வலசு, கேட்டுக்கடையை சேர்ந்தவர் ஹரிஹரன்; லாரிடிரைவர். இவரும், உதவி டிரைவரான கோபாலகிருஷ்ணனும், ஒரு 'டாரஸ்' லாரியில், கேரளாவில் இருந்து, நாசிக் நகருக்கு ரப்பர் லோடு ஏற்றிச் சென்றனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு, பெருந்துறை, எல்லப்பாளையம் பிரிவு அருகே, திடீரென மர்ம கும்பல் லாரியை மறித்தது. டிரைவர் ஹரிஹரன் லாரியை நிறுத்தினார். இரும்புக்கம்பியால், ஹரிஹரன், கோபாலகிருஷ்ணனை, அக்கும்பல் சரமாரியாக தாக்கியது. இருவரும் படுகாயமடந்தனர். ஹரிஹரனிடம் இருந்த, 15 ஆயிரம் ரூபாய் மற்றும், லாரிக்குள் இருந்த வாடகைப்பணம், 35 ஆயிரம் ரூபாயையும், கோபால கிருஷ்ணனிடம் இருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் ஃபோனையும் அக்கும்பல் பறித்துக் கொண்டு தப்பியது. பெருந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை