மேலும் செய்திகள்
வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்
12-Feb-2025
கோபி கோட்டத்தில் ஆறு மாதத்தில்667 வழக்குக்கு சப்-கலெக்டர் தீர்வுகோபி:கோபி வருவாய் கோட்டத்தில், சப்-கலெக்டர் சிவானந்தம் கடந்த ஆறு மாதங்களில், 667 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.கோபி வருவாய் கோட்டத்தில், கோபி, சத்தி, நம்பியூர், தாளவாடி, பவானி, அந்தியூர் என ஆறு தாலுகாக் கள் உள்ளன. நான்கு சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய ஆறு தாலுகாவில் மொத்தம், 9.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். கோபி கோட்டத்தில் ரெகுலர் தாசில்தார்கள் ஆறு பேர், 20 மண்டல துணை தாசில்தார்கள், 21 ஆர்.ஐ.,க்கள், 209 வி.ஏ.ஓ., க்கள் பணிபுரிகின்றனர்.கோபி கோட்ட சப்-கலெக்டராக கடந்த, 2024 செப்.,9ல், சிவானந்தம் பொறுப்பேற்றார். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி, கோபி கோட்டத்தின் சப்-கலெக்டர், உட்கோட்ட நடுவர் என்பதால், ஆறு தாலுகாவுக்கு உட்பட்டோர் வழக்கு தொடுக்கின்றனர். அதன்படி, வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை, கொடுக்கும் அறிக்கையின்படி, முழுமையான விசாரணைக்கு பின், சம்பந்தப்பட்ட துறையினர், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் இறுதி உத்தரவு வழங்குகிறார்.அதன்படி, கோபி கோட்டத்தின் சப்-கலெக்டராக அவர் பொறுப்பேற்றது முதல், இதுவரை, 328 பிறப்பு மற்றும் இறப்பு வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். தவிர, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல வாழ்வு சட்டத்தின்படி, 125 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். மேலும், கோவில் மற்றும் வழித்தடம் சார்ந்த பிரச்னை சார்ந்த, 60, இறப்பு சார்ந்து ஆறு, பட்டா மாறுதல் மேல் முறையீடாக, 148 வழக்குகள் என மொத்தம், 667 வழக்குகளுக்கு அவர் தீர்வு கண்டுள்ளதாக, அதிகாரி கள் தெரிவித்தனர்.
12-Feb-2025