டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ஈரோடு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, அறநிலையத்துறை, வேளாண் துறை, நில அளவை பதிவேடு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வரை தொழில் அலுவலர், உதவி வேளாண் அலுவலர், தொழில் நுட்பவியலாளர், அளவர் என, 861 பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., கம்பைன்டு டெக்னிக்கல் சர்வீஸ் தேர்வு அறி-விக்கப்பட்டது. நவ.,9ல் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் நடக்க உள்-ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860 என்ற எண்ணில் அறியலாம்.கூட்டுறவு துறை செயல்பாடு ஆய்வுஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, இணை பதி-வாளர் செல்வகுமரன் பேசினர். கூட்டுறவு மூலம் வழங்கப்படும் கடனுதவி, இ-சேவை மைய செயல்பாடு குறித்து ஆய்வு செய்-யப்பட்டது.