உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சி.என்.ஜி., பஸ்களை அதிகரிக்க திட்டம்

சி.என்.ஜி., பஸ்களை அதிகரிக்க திட்டம்

திருப்பூர்: சுற்றுச்சூழலுக்கு உகந்த சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரி-வாயு பஸ்களை தமிழக அரசு கடந்தாண்டு நவ., முதல் விரைவு பஸ்களாக இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.சி.என்.ஜி., பஸ்களில் ஒரு முறை எரிவாயு நிரப்பினால், 600 கி.மீ., துாரம் வரை பயணிக்க முடிகிறது. ஒரு கி.மீ.,க்கு 3 முதல் 4 ரூபாய் வரை மிச்சமாகியுள்ளது. ஒரு பஸ்சுக்கு ஒரு மாதத்துக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாவதால், சி.என்.ஜி., பஸ்கள் எண்-ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்-ளது.இது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த வழித்தடங்களில் சி.என்.ஜி., பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வரலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வரு-கிறது.அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறுகையில், ''மாநிலம் முழுதும் தற்போது, 20 வரை உள்ள சி.என்.ஜி., பஸ் எண்ணிக்கை, 40 - 50 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் சி.என்.ஜி., பஸ்கள் கொண்டு வரப்-பட உள்ளது. அதற்காக, எந்தெந்த வழித்தடத்தில் டீசல் செலவு அதிகம் ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, அந்த வழித்த-டத்தில் டீசல் பஸ்சுக்கு மாற்றாக சி.என்.ஜி., பஸ் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும். சி.என்.ஜி., பஸ் வழித்தடம் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ