உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்

மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்

ஈரோடு: ஈரோடு மரப்பாலம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றும், மருந்துகள் வாங்கியும் செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள நிலையில், மருந்து பற்றாக்குறை நிலவுவதாக புகார் எழுந்தது. மேலும், மருத்துவமனையை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவொரு வசதியும் இல்லை என்றும் பொதுமக்கள், கவுன்சிலர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இத்தனை பிரச்னைகளுடன் செயல்பட்டு(?) வரும் மருத்துவமனையில், தற்போது மருத்துவரும் இல்லாததால், நோயாளிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து மாநகர நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் ஓய்வு பெறவுள்ளார். இதனால் அவர் தற்போது விடுப்பில் உள்ளார். ஓய்வு பெற்றவுடன் புதிய மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து பற்றாக்குறையும் தீர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ