உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகலில் யானை உலா

பகலில் யானை உலா

பகலில் யானை உலாஅந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில், தாமரைக்கரை - ஜெல்லி செல்லும் வனச்சாலையில், ஒரு ஆண் யானை நேற்று பட்டப்பகலில் சாலையில் நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து வாகனங்களை ஓரம் கட்டினர்.பத்து நிமிடம் நடமாடிய பிறகு, தானாக வனத்துக்குள் சென்று விட்டது. பர்கூர் மலைப்பாதை சாலையில், யானைகள் உணவு, தண்ணீர் தேடி சாலையை கடப்பது அதிகரித்துள்ளது.எனவே வாகன ஓட்டிகள் யானையை படம் பிடிப்பது, வீடியோ எடுப்பது, வாகனங்களை நிறுத்தி ரசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை